பக்கம்:படித்தவள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

83



பிறைமதி என்று விளக்கிவிட்டு அவளுக்கு வேலை கிடைத்துவிட்டது என்றேன்.

“தெரியும், எழுதி இருந்தாள்” என்றான்.

சுற்றி வளைக்க விரும்பவில்லை. சுழி முனைக்குவந்து நின்றேன்.

“அவளை என் மகன் வேலுச்சாமிக்கு மணம் முடிக்கலாம் என்று இருக்கிறேன்” என்றேன்.

“அவள் ஒப்புக் கொண்டாளா?” என்று கேட்டான்.

“முதன் முதலில் வேலுவைப் பற்றி இப்பொழுதுதான் விசாரித்தாள். என்னை மாமனாராக அடைய எந்தப் பெண்ணும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொன்னாள். நீ என்ன நினைக்கிறாய்?

“வேலு அவளுக்குத் தெரியுமா?”

“எதிர் வீடுதானே பழகியவர்கள்வ என்றேன்.

“நல்ல பெண் குடும்பத்துக்கு ஏற்றவள். தாய்ப்பாசம் நிறைந்தவள். அம்மாவை விட்டு வெளியே போக மாட்டாள்” என்றான்.

“அதனால் என்ன? மாமியாரும் அங்கு இருப்பதால் எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை” என்றேன்.

“என் வாழ்த்துக்கள்” என்றான்.

“மண அழைப்பு அனுப்புவேன்; கட்டாயம் வந்துவிடு” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/85&oldid=1342858" இலிருந்து மீள்விக்கப்பட்டது