பக்கம்:படித்தவள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

ராசீ



அவர் முகத்தில் ஏமாற்றம் தென்பட்டது.

“யாருக்கு? உங்கள் பையனுக்கு முடித்து விட்டீரா?” என்று கேட்டார்.

“அநேகமாக முடிந்தது போல்தான் என்று அறிவித்தேன்.


15

வீட்டுக்குச் சென்றேன்; அவள் பாட்டுக்கு ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள்; அதைக் கேட்டுக் கொண்டு இருப்பேன்.

“எதிர் வீட்டுக்குப் போய் வந்தேன்” என்றாள்.

“பிறை அப்பாவுக்கு நினைவு நாளா?” என்றேன்.

“துணிந்து வேலுவுக்குப் பிறையைத் தரமுடியுமா” என்று வினவினேன்.

“தடை இல்லை” என்று விடைதந்தார்கள் என்றாள்.

இவ்வளவு எளிதாக எல்லாம் முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

அதைவிடப் பிறை சிறிது நேரத்தில் என் வீட்டுக்கு வருவாள் என்று எதிர்பார்க்கவே இல்லை.

மருமகளே மணமாவதற்கு முன் வருவது சரியாகப்படவில்லை.

“அத்தை வந்தார்கள்; வேலுவுக்குச் சமைச்சிப்போட ஆள் இல்லை என்றார்கள்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/88&oldid=1342840" இலிருந்து மீள்விக்கப்பட்டது