பக்கம்:படித்தவள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித்தவள்

87



“அதை அடிக்கடி சொல்கிறாள்; புதியது ஏதாவது?”

“நான் மணம் செய்து கொள்ளப் போவது இல்லை; இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்” என்றாள்.

“மற்றொன்று என் தாயைவிட்டுப்பிரிய முடியாது; அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டார்கள். நான் அவர்களை விட்டுப்போக முடியாது. இதை எடுத்து அவர்களிடம் சொன்னேன்” என்றாள்.

அவளுக்குத் தெரியவேண்டும் என்பதற்காக இதையும் சொல்லிவைத்தேன்.

“முத்து வர மூன்று ஆண்டுகள் ஆகும்; அவன் சவுதிக்குப்போகிறான்; இங்கு வேலை கிடைக்கவில்லை” என்றேன்.

“தெரியும் கேள்விப்பட்டேன்; இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலை இல்லை; எங்கள் எதிர்காலம் பாரத மண்ணில் இல்லை” என்றாள்.

“அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருந்தால் அவனை நீ மணந்து இருக்கலாம்; பண்ணயாருக்குச் சொல்லிஇருப்பேன்” என்று பற்று நீங்கிய நிலையில் அவள்ரிடம் பேசினேன்.

இதை அவள் செவியில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.

“என் தாய்தான் என் முதற்கடமை; அவளுக்காக நான் காலம் காலமாய் மணம் இல்லாமல் இருக்க முடியும்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/89&oldid=1342849" இலிருந்து மீள்விக்கப்பட்டது