பக்கம்:படித்தவள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்னாகரினா செய்தது சரியா? இந்த இளைஞன் தன் மனைவியைக் கொலை செய்து விட்டுச் சிறை சென்றது சரியா?

கதை சொல்பவர் இந்த வினாக்களுக்கு என்ன விடை காண்கிறார். இது கதையில் கேட்கப்படும் வினா. அதற்குத் தரப்படும் விடை இதில் இடம் பெறுகிறது.

3. மனை நலம்

மனைமாட்சிக்கும் மனைநலத்திற்கும் வேறுபாடு உள்ளது. மனைமாட்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சில அளவைகள் அவை குறைந்தும் விடுகின்றன. அவற்றை ஏற்பது எப்படி? அதற்கு விடை தருகிறது இக்கதை. இதன் மையக் கருத்து இந்நூலில் பக்கம் 164-ல் இடம்பெறுகிறது.

‘காதலித்து மணம் செய்து கொள்வது காவிய நெறி. அது போற்றத்தக்கதுதான். அந்த உரிமை எல்லாப்பெண்களுக்கும் வாய்க்கும் என்று கூற முடியாது. பெரியவர்கள் முன்னிருந்து பேசி நிச்சயிப்பதுதான் இன்றைய நடைமுறை.இது இரண்டாவது அவள் ஏற்கனவே காதலித்து இருக்கலாம்; பின் தெளிவுபெற்று இருக்கலாம்; காதலித்தவன் வாழ்க்கைக்கு உறுதிகொடுப்பான் என்ற அறுதி செய்ய இயலாது. ஊதி வைக்கும் பலூன் வெடித்துப் போக வாய்ப்புண்டு. அப்புறம் அது வெறும் ரப்பர் தோல்தான். காதல் சந்திப்புகள் வாழ்க்கையில் ஒரு சூழ்நிலைச் சூழல்கள் எனலாம்; அதில் முழுகி எழுந்து பின் தொடர்ந்து அவனையே மணக்கலாம்; மனத்துக்கு அது துணையாகலாம்; ஆனால் அதுவே முடிவு என்று கூற முடியாது. மனம் மாறிவிடலாம். மேல் நாட்டிலும் மணம் ஆவதற்கு முன் இருவருமே சேர்ந்து பழக அனுமதிக்கப்படுகின்றனர்; ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கின்றன. “பிடிக்கவில்லை” என்றால் இடுப்பில் இருந்து கைகள் விலக்கப்படுகின்றன. இதில் என்ன தவறு இருக்கிறது?”

இது இன்றைய குறைகளுக்குத் தீர்வு. முடிவு? இந்தக்கதை கூறுகிறது.

4. பத்திரிகைபடி

இன்று திரைக்கதை என்றால் மருத்துவமனை, காவல் நிலையம்; சிறைக் கம்பிகள்; நீதிமன்றங்கள்; இவை நிலைத்த செட்டுகள் ஆகிவிட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/9&oldid=1123421" இலிருந்து மீள்விக்கப்பட்டது