பக்கம்:படித்தவள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்தவள் 89 "அதற்காகத்தான் நான் இதை உங்களிடம் சொன்னேன்; நீங்கள் அவசரப்படுவீர்கள் என்பதுவும் தெரியும் முத்துவிடம் கூறுவீர்கள் என்பதுவும் தெரியும். என் காதலைவிட அவன் ஆண்மைதான் அவசியம்; பொருள் இல்லாதவர்க்குக் காதல் இல்லை. வினைதான் ஆடவர் உயிர்; ஆள்வினை தான் ஆடவரின் செயல்பாடு. முதலில் அவன் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். அவன் நெஞ்சு ஊசலாடிக் கொண்டிருந்தது. என்மேல் வைத்த விருப்பு அவனை அழுங்க வைத்தது. அதை மாற்றத்தான் உங்களைத் துண்டினேன்" என்றாள். படித்தவள் அறிவுள்ளவள் என்பதை அறிந்தேன். நான் எவ்வளவு துரம் எளிமையாகி விட்டேன் என்பதற்கு வருந்துகிறேன். 16. பண்ணையார் வீடு சுருசுருப்பாக இயங்கியது. காரணம் முத்துவின் வெளி நாட்டுப் பயணம் என்பது அறிந்தேன். முதிய வயதில் அவர்களை விட்டு விட்டுக் கடல் கடந்து போகிறான்; துயரம் ஒரு புறம்; அவர்கள் வறுமை நீங்கி வளம்மிக்க வாழ்வு பெறுகிறார்கள் என்ற நம்பிக்கை மற்றொரு புறம். சென்னை மீனம்பாக்கத்தில் மூன்று மணி நேரத்துக்கு முன் நாங்கள் அனைவரும் சென்றிருந்தோம், முத்துவின் தாய் சில முதுகளை உதிர்த்தாள். அப்பா அவனைச் சேர்த்து அணை, துக் கொண்டு பிரியா விடை தந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/91&oldid=802592" இலிருந்து மீள்விக்கப்பட்டது