பக்கம்:படித்தவள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் உணர்ச்சி வயப்பட்டேன். "உனக்குத் துரோகம் செய்து விட்டேன்” என்று கத்தினேன். "மெதுவாகச் செய்யுங்கள்" என்றான் அவன்; அதன் பொருள் விளங்கவில்லை. எதிர்பார்க்கவில்லை; முத்துவும் எதிர்பார்க்கவில்லை. அந்த நாட்டில் அவனுக்குப் பயன்படக் கூடிய வகையில் ஊறுகாய், சமையல் சரக்குகள், இனிப்புகள் இவற்றை எடுத்துக் கொண்டு பிறை வருவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முத்துவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தாவிட்டாலும் வியப்பு ஏற்பட்டது. “grgy பெற்றோர்களை விட்டுச் செல்கிறேன். அவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் விட்டுச் செல்லவில்லை. இதுதான் என் வருத்தம்" என்றான் அவன். "அவர்கள் என் பாதுகாப்பில் இருப்பார்கள். என் தாயும் உன் பெற்றோர்களும் என் கண்கள்" என்றாள். அவனுக்கே விளங்கவில்லை. பொன்னொளிர் சரம் ஒன்று ஆரமாக அவனிடம் தந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/92&oldid=802593" இலிருந்து மீள்விக்கப்பட்டது