பக்கம்:படித்தவள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 1 கோபி இவன் எதிர் வீட்டுப் பையன், வயது எட்டு இருக்கும்; எனக்குத் தெரியாது. நான் கேட்டது இல்லை; என்னைவிட அவன் இருபது வயது சின்னவன். இந்த வித்தியாசம் தவிர வேறு எந்த வித்தியாசத்தையும் அவனிடம் பார்ப்பது இல்லை; அவனும் வித்தியாசம் இல்லாமல் பழகுவான். கூப்பிட்டால் வருவான் கூப்பிட்ட குரலுக்கு; கூப்பிடாவிட்டால் வரமாட்டான். தேவை இல்லை என்று; ஒசியில் பேப்பர் வாங்கிக் காசினை மிச்சப்படுத்தும் பழக்கம் என்னிடம் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை; நமக்குத்தான் கஷ்டம்; திருப்பித் தரமுடியாது. அதை எங்கே வைத்தோம் என்று தெரியாது. "கோபி! உங்கள் வீட்டிலிருந்து இந்து பேப்பர் கொண்டு வந்துதரமுடியுமா?" என்பேன். "இதிலே என்ன விசேஷம் என்று கேட்பான்; நியூஸ் இருக்காது விளம்பரங்கள் இருக்கும்" என்பேன். 'தினத்தந்தி கேட்பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/94&oldid=802595" இலிருந்து மீள்விக்கப்பட்டது