பக்கம்:படித்தவள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

एाé "அப்படி எல்லாம் பேசக்கூடாது. தப்பு தப்பு" என்று சொல்லி அவன் தன் கன்னத்தில் இரண்டு தடவை அடித்துக்கொண்டான். "நான் செய்த தப்புக்கு நீ ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?” என்றேன். "நடிகையைத் தரக்குறைவாகப் பேசக்கூடாது” என்றான். "கமல் அந்தப்படத்தில் நடிக்கிறார்” என்றான். "அவரை எனக்குத் தெரியுமே" என்றேன். "எப்படி உங்களுக்குத் தெரியும்?" "எனக்கு அவரை நன்றாகத் தெரியும்; அவருக்கு என்னைத் தெரியாது. அவர் நடித்த படங்களை நான் விடாது பார்ப்பேன்; அவர் என்னைப் பார்க்க வாய்ப்புகள் இல்லை" என்றேன். "இவ்வளவுதானா?” "அவர் அதில் சப்பாணி, அந் நடிப்பே ஒரு தனிப் பாணி; சொந்தப் பெயர் கோபாலகிருஷ்ணன், அதைச் சொல்லிக் கூப்பிடாமல் சப்பாணி என்று கூப்பிட்டதால் கோபமாக அணுகிச் சப்பு என்ற ஒன்று ரஜினிக்குத் தருகிறார்." என்றான். "அடிக்கலாமா?” என்றேன். "அடிக்கக்கூடாதுதான். பொம்மனாட்டிப் பேச்சுக் கேட்டு நடந்துகொண்டார்” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/96&oldid=802597" இலிருந்து மீள்விக்கப்பட்டது