பக்கம்:படித்தவள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 t][ó# எவ்வளவு மூச்சு குரல்வளை முயற்சி தேவைப்படும் என்று கூட்டிப்பார். என்னைப்போல் சின்னதாக ஒரு பெயர் வைத்துக்கொண்டால் எழுத்து மிச்சம், அதனால்தான் கோபி என்று கூப்பிடுகிறேன்” என்றேன். "கோபி என்றால் முன்கோபி, கோபக்காரன் என்று பொருள்படுமே” என்றான். "பாபி என்று வைத்துக்கொள், இந்திப் பெயர் வைப்பதுதானே இன்றைய மந்திகளுக்கு நாகரிகம்” என்று கூறினேன். "பாபி என்றால் தமிழில் பாபம் செய்பவன் என்று பொருளாகிவிடும்" என்றான். "கோபி, பீபி, பேபி என்று எத்தனையோ பி இருக்கின்றது. ஏதாவது சொல். அதை வைத்துக்கொள்" என்றேன். "கோபி என்றே கூப்பிட்டுக் கொள்ளுங்கள்”. "சரி நீ கம்முன்னா கம் கம்முனாட்டி கோ" என்றேன். அவன் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் போய் விட்டான். 2 ஆழ்ந்து யோசித்துக் கொண்டு. இருந்தேன். என்னைக் கம்மினாட்டி என்ற சொல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருந்தது இந்தச் சொல் எந்த மொழிச்சொல்? எப்படித் தமிழில் புகுந்தது? இயற் சொல், திரி சொல், திசைச் சொல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/98&oldid=802599" இலிருந்து மீள்விக்கப்பட்டது