பக்கம்:படித்தவள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைகள் 97 வட சொல் என்று நான்கு சொற்கள் தமிழில் இடம் பெற்றிருக்கின்றன என்று நற்றமிழ்ப் புலவர்கள் நவின்றுள்ளனர். இச்சொல் யாதோ எப்படிவந்தது என்று கதிகலங்கி உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தேன். என் சிந்தனையைக் கலைக்க என்று பிறந்த சீர் இளமைத் திறம் வாய்ந்த என் பேச்சுத் துணைவி என்னை ஏச்சுக்கு அழைத்தாள். "என்ன எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த யோசனை" என்று கேட்டாள். "கந்தகோட்டமாகிய சந்தத் தமிழில் ஒரு ஒட்டை விழுந்துவிட்டது. எப்படியோ அந்நியக் கலப்புத் தமிழின் தாய்மையைக் கெடுத்துவிட்டது. கதிகலங்கி நிற்கிறேன்" என்றேன். - 'இதுவா ! இதுக்கா மண்டையை உடைத்துக் கொள்கிறீர்கள் ?” "என்ன பயன்? அதன் உள்ளே ஒன்றுமில்லையே என்ன செய்வது” என்று உரை தந்தேன். "அறுவை வருவார்; இன்று ஞாயிற்றுக் கிழமை; எட்டு முப்பதுக்கு வந்துவிடுவார். அவரிடம் உங்கள் வேதனையைக் கூறினால் அவர் சாதனை ஏதாவது செய்வார்” என்று கூறினாள். என் நண்பன் அவளுக்கு அறுவையாகப் பட்டான். நான் அவன் வரும் தெருவை எதிர் நோக்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:படித்தவள்.pdf/99&oldid=802600" இலிருந்து மீள்விக்கப்பட்டது