பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முன்னுரை இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்னல் கடந்த ஒரு நிகழ்ச்சி. கினைத்தாலும் எனக்கு உள்ளத்திலே தேன் ஊறு கிறது. அப்பொழுது நான் கல்லூரியிலேபடித்துக் கொண்டிருங் தேன். நானும் என் நண்பன் ஒருவனும் ஒரே மாணவர் விடு தியில் இருந்தோம். கண்பன் பொங்கல் விழாவிற்காகத் தன் சொந்த ஊருக்குப் பல நாள் முன்னதாகவே போயிருந்தான். காங்கள் இருவரும் கொங்குநாட்டு வேளாளர்கள்; உற வினருங்கட்ட. எங்களுக்குப் பொங்கல்தான் மிக முக்கிய மான திருநாள். அவனைப் பிரிந்திருந்த எனக்கு என்னவோ போல இருந்தது. பொங்கலுக்குப் பிறகு திரும்பி வரும்போது அவனுக்கு உகந்ததாக ஏதாவது ஒரு பரிசு அளிக்க வேண்டுமென்ற ஆவல் என் உள்ளத்திலே பொங்கியது. இன்றுபோல அந்தக் காலத்திலே பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் பொங்கல் வாழ்த்தாக அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண் டும் என்று கான் ஆவல் கொண்டேன். பொங்கல் வாழ்த்து என்று தலைப்பிட்டு ஒரு சிறிய அழ கான கோட்டுப் புத்தகத்தில் பக்கத்திற்கு ஒன்ருகப் பல கவிதைத் துணுக்குகளை எழுதி அவனுடைய பெட்டியிலே மறைவாக வைத்துவிட்டேன்.