பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறுகி வளைந்து கோணலாகத் தன்னிச்சைப்படி கிடந்தபோது எஃகுக் கம்பியில் உயிர் இருக்கவில்லை.


வீணையிலே இழுத்துக் கட்டி முறுக்கியபோது அதனிடத்திலே அமுதமயமான உயிரிசை பிறந்தது.


“ கடல்போல் ஆழமும் விரிவுங்கொண்டு பொங்குகிற என் காதலுக்கு இந்த உலகம் ஏன் எல்லை வகுக்க வேண்டும்?”


அந்தக் கடலையே கேட்டுப் பார்.


கடல் கூறுகிறது: “கரையைக் கடவாது நிற்கும்போது நான் உலகுக்கு இன்பந் தருகிறேன். கரை கடந்து பொங்கும் போது உலகை அழிக்கிறேன்.”

46