பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


1930-ஆம் ஆண்டிலே தைப் பொங்கல் நாளன்று இது நடந்தது. ஒரு வாரம் அதே பணியில் ஈடுபட்டிருந்து அன்று முடித்தேன்.

அந்தப் பொங்கல் பரிசில் நானே சொந்தமாக எழுதியவைகளும் கவி ரவீந்திரநாத தாகூரின் விடுதிப் பறவைகள் (Stray Birds) என்ற நூலிலிருந்து மொழி பெயர்த்தவைகளும், வேறு சில மொழிபெயர்ப்புகளுமாகப் பல சிறு சிறு துணுக்குகள் அடங்கியிருந்தன. நானே எழுதிய சற்று நீண்ட கவிதைகளும் இருந்தன.

எனது நண்பன் என்மேலுள்ள அன்பினாலோ, நான் எழுதியவற்றில் உண்மையான சுவை கண்டோ, இவ்விரண்டின் கூட்டு வலிமையாலோ பல ஆண்டுகள் வரை அந்தப் பொங்கல் பரிசைக் காப்பாற்றி வைத்திருந்து, பிறகு என்னிடம் கொடுத்து, அச்சிட்டு வெளியிடும்படி கூறினான். அவற்றைப் பாராட்டியும் பேசினான். அது அவனுடைய அன்பின் மிகுதியைக் காட்டுவதாகவே நான் கொண்டேன்.

என் நண்பனுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல் நீண்ட காலம் கடத்திவிட்டேன். ஆனால், அண்மையிலே தற்செயலாக அந்தப் பொங்கல் பரிசை எடுத்து ஆராய நேர்ந்தது.

அதில் உள்ள கவிதைத் துணுக்குகளும், எண்ணத் துணுக்குகளும் புதியதோர் வலிமையோடு என்னைக் கவர்ந்தன. இதுவரை செய்யத் தவறிய காரியத்தைச் செய்து முடிக்கவேண்டுமென்ற ஆவலும் பிறந்தது.

பொங்கல் பரிசில் உள்ள சில கவிதைகள் முன்பே ‘இளந் தமிழா’ என்ற தலைப்புள்ள என் கவிதை நூலில், சேர்ந்துவிட்டன. அவற்றையும் வேறு சில பகுதிகளையும்