பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 | பட்டி மண்டப வரலாது

மன்னுயிர்க் குயிராய் ஆர்க்கும் தாதையாம் சிவனே வாய்மைத் தற்பவன்

# 1 (அனைத்துமான முதல்வன் ,7 என்றும் ஒர் இடைக்காலத் தீர்ப்பு கூறின.

முடுகிய வாதம் முடியவில்லை, கடுகியது.

பொறுக்க முடியாத நிலையில் சிவபெருமான் தன் முதன்மையை வெளிப்படுத்த பெரும் பேரொளியாய்த் தோன்றினார் . கண்ட திருமால் உண்மையை உணர்ந்து ‘சிவனே தம்மினும் உயர்ந்தவர் என்பதை ஏற்று வாதத் திலிருந்த ஒதுங்கினார் வாதி ஒருவர் பின்வாங்கினாலும் வாதம் தொடர்ந்தது. பிரமனார் பிடிவாதமாகப் பேசினார்.

சிவனார் தாங்க முடியாமல் சற்றே வெறுப்பில் அரும்பினார். புன்முறுவலால் புரங்களை எரித்தவர் உதட்டின் ஒரத்தில் முறுவலின் துளி ஒன்றைக் காட்டினார். உடன் பெரும் வீரனான வீரபத்திரன் தோன்றினான். அவனைத் தன் நகமாக ஏவினார். அதனால் பிரம்மரின் மேல் நோக்கிய முகம் கொண்ட தலை கிள்ளப்பட்டது. தீர்ப்பை ஏற்காததால் ஒறுக்கப்பட்டார் ஐந்து முகத்தில் ஒரு முகம் போக நான்முகன்’ ஆனார் . பட்டி மண்டப ஒறுத்தலால் அது முதல் நான்முகமாக நிலைத்துவிட்டது.

தீர்ப்பு சொல்லப்படாமல் செயலில் சிவனே முதல்வன்’ என்று முடிந்தது.