பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 87

கண்டித்தமையும், இரண்டும் சிறந்தனவே என்}} பொதுத்தீர்ப்பு, சொன்னமையும் ஒரு புதுப்பங்கு.

(8) ஒரு சமயத்தில் உள்வாதப் பங்கு

ஒரு சமயம் மற்றொரு சமயத்துடன் பிணங்கி வாதிட்டவற்றைக் கண்டோம் . ஒரே சமயத்திற்குள் சில கோட்பாடு நடைமுறை வேறுபாட்டால் அவர்கட்குள் செய்து கொண்ட வாதமும் உண்டு.

சமண சமயத்துள் ஆசீவகம், நிகண்டம் எனப் பிரிவுகள் உள்ளன . இரண்டு பிரிவிற்கும் கடவுளர் வெவ் வேறானவர். நூலும் பொருளும் வெவ்வேறானவை. புத்தத் தில் தலைவனும் நூலும் ஒன்றே நடைமுறைக்கோட் பாட்டில் மகாயானம், ஈனயானம் என்னும் பிரிவுகள் உள்ளன. இவ்விரு சமயத்தாரும்பிணங்காமல் கருத்துவேறு பட்டு வாதிட்டுள்ளனர். :

இவ்வாறு சைவத்துள்ளும் நடந்தது . ஒன்றை விளக்குவது மற்றவற்றிற்கும் சான்று ஆகும்.

உமாபதி தேவர் என்னும் சைவ சித்தாந்தி சங்கற்ப நிராகரணம்’ என்றொரு நூல் எழுதினார். இச்சிறுநூல் ஒரு உள்வாத நூல். -

கி பி , 1373இல் ஆணித் திங்களில் பொற்றோர்க் கோயிலின் ஆறாம் நாள் விழாவில் இவ்வாதம் நிகழ்ந்ததாக இந்நூல் குறித்தது. -