பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 | பட்டி மண்டப வரலாறு

மணிமேகலை சமயக் கணக்கர் தம் திறம் கேட்டது

போன்று உமாபதி தேவர் உள்வகையான பேச்சில் பத்து வாதிகளுடன் உரையாடியவாதம் இது. மணிமேலை எதிர் வாதம் செய்யாமல் தன் புத்தகத்தில் நின்று பிறர் கருத்தை அறிந்தான் . இங்கு சைவசித்தாந்தி பல சைவக் கோட் பாடுகளையும் கேட்டு அவற்றை மறுத்து வாதம் செய்தார். உள்வகையார் ஒவ்வொருவர் கொண்ட கோட்பாடு உறுதியை - சங்கற்பத்தைச் சொல்ல அதற்கு மறுப்பு - நிரா கரணம் சொல்வதாக இஃது அமைந்தது . பதின்மருள் மாயாவாதி தவிர மற்றவர்க்குச் சிவபெருமானே கடவுள் மற்றவர்,

1) ஐக்கிய வாதி

2) பாடான வாதி

3) பேதவாதி

4) சிவசமவாதி

5) சங்கிராந்தவாதி

6) சிவஅவிகாரவாதி

7 நிமித்தகாரணபடிமுறை வளர்ச்சி வாதி

8) சைவவாதி

9 சைவமுடிந்தமுடிவு'சித்தாந்தவாதி.எனப்பட்டனர்.