பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 T பட்டி மண்டப வரலாறு

வாதங்கள், அவ்வப்போது, ஆங்காங்கு நிகழ்ந்தன. சான்றுக்கு ஒன்றிரண்டு கொள்ளலாம்.

நூல் அரங்கேற்றத்தில் தடைவிடை நேர்ந்து அதன் வளர்ச்சிதான் பட்டிமண்டப வாதமாயிற்று என்று கண்டோம். அவ்வகையில் அருணகிரிநாதர்'கந்தரலங்காரம்’ என்னும் நூலை அரங்கேற்றினார். புலவர்பால் குறைகண்டு வென்று அவர்தம் காதை அறுத்து ஒறுக்கும் செயலைச் செய்பவர் வில்லிபுத்துரார். அவர் அருணகிரியாரின் நூல் அரங்கேற்றத்தில் தடை எழுப்பினார் விடை கிடைத்தது. இந்நிலையில் அருணகிரியார் கந்தரந்தாதிப் பாடலில் வரும் தித்தித்த என்னும் சொல்லுக்குப் பொருள்கேட்டு அறைகூவ, வில்லியார் இயலாமல் நிற்க அருணகிரியார் ஒறுத்தலாக அவர் காதை அறுக்காமல் ‘காது தானம்’ பண்ணினார். இஃதொரு குட்டிப் பட்டிமண்டபம்.

திறம் வாய்ந்த புலவர்கள் புகழேந்தியும் ஒட்டக் கூத்தரும் பாண்டிய சோழ மன்னரது பெருமைகளை மாறிமாறிப் பாடிப் புலமை வாதம் புரிந்தனர்.

இவ்வாறு குட்டிப் பட்டி மண்டபங்கள் பல நிகழ்ந் தன. இவையும் ஒரு பங்கே. (10) இசை, கூத்து வாதப் பங்கு

தொல்காப்பிய உரை,

சொல்லாலும் பாட்டாலும் கூத்தாலும் வேறலாம்"