பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 H பட்டி மண்டப வரலாறு

--

இசையில் வென்று விருது பெற விரும்பினாள் தன் வயப்பட்டிருக்கும் பாண்டிய மன்னனைப் பயன்படுத்த முனைந்து “என்னோடு இசைபாட வல்லவர் உளரோ” என்று அறை கூவினாள் மதுரையில் தலைசிறந்த பாடினி யாக விளங்கும் பாணபத்திரன் மனைவியுடன் இசைப் போட்டிக்கு மன்னனது துணையைத் தூண்டிவிட்டுப் பெற்றாள். மன்னனும் இசைந்து ஈழநாட்டுப் பாடினிக்குச் சார்பான கருத்துடன் பாணபத்திரன் மனைவியைத் தாழ்த்தும் நோக்கத்தோடு இசைப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தான்.

பாண்டியன் அரண்மனையில் இயலும் இசையும் அறிந்த சான்றோர் அவை கூடியது. இரண்டு பாடினியரும் இசைப்போட்டிக்கு அமர்ந்தனர் . ஈழநாட்டுப் பாடினி பாணபத்திரன் மனைவியைத் தாக்கிப்பேசினாள் மன்னன்

விலக்குவான் போன்று இடையிட்டு

மடந்தையரே! இருவரும் பாடுவீர் எவர் வெற்றி பெறுவீரோ அவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும். இஃதே போட்டிமுடிவுக்கு விதி’

என்று போட்டிப் அறிவித்தான் இருவருக்கும் மானமூட்டித்துாண்டினான். இருபாடினியரும் மாறிமாறிப் பாடினர். தமிழ்ப் பாடினி பாடல் மேம்பட்டு விளங்கியது. சுவைத்த அவையோர் இவள் பாடலைப் பr ாட்டித் தலையசைத்தனர்.