பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 93

தனது உட்கோள் மாறுவதைக் கண்ட பாண்டியன் ஈழத்துப் பாடினியைப் பாராட்டித் தலையசைத்தான். மன்னவனது விருப்பம் அறிந்த அவையோரில் தலை யாட்டிகள் மன்னன் எவ்வழி அவ்வழி குடிகள் ஆயினர். இது வேந்தன் ஒருவர்க்கு வாரம் படினும்” என்றமையை நினைவுபடுத்துகின்றது . ஆயினும் தமிழ்ப் பாடினியது இசை மேலோங்கி வருவது புலனாகிக்கொண்டே வந்தது. பொறாத மன்னன் அழிவழக்குப் பேசி இசைப்பட்டி மன்றத்தை மறுநாளில் ஒற்றிவைத்தான் . அவையோரும் தலையாட்டிகள் ஆயினர்.

மறுநாள் இசைப்பட்டி மன்றம் கூடியது . இன்றும் நேற்றைய நிலையே நிலவியது. தமிழ்ப்பாடினி எழுந்தாள்;

மன்னவனை நோக்கி,

“மன்னவா இறைவன் திருமுன் இருவரும்பாடுவோம்; எம் இருவரது பாடலையும் அங்கு நீ கேள் கேட்டு ‘இவள் வென்றாள்’ என்று தீர்ப்பினைச் சொல். அதனை ஏற்றுக் கொள்வேன். 78

மன்னவன் வேறு வழியின்றி இசைந்தான்.

என்றாள்.

இறைவன் திருமண்டபம் இசைப்பட்டி மண்டபம் ஆகியது. இசைப்போட்டி தொடர்ந்தது . இருவரும் தத்தம் திறங் காட்டிப் பாடினர். பாண்டியன், -

இறைவன் அருளால் தன் மனத்து அழுக்கை விட்டான், முரண்பட்ட கருத்தைப் போக்கினான்;