பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் | 97

நாவல் - அறைகூவல் குறி

இந்தியப் பெருநாட்டின் பழங்கால நாட்டு மரம் நாவல் மரமாக இருந்தது . இதனால் இதற்கு நாவலந் தண்பொழில்"என்றுபெயர்.

‘நாவல் அம் தண் பொழில் என்று பெரும் பாணாற்றுப்படை (465) பாட சிலம்பும் (173) மணிமேகலையும் (22 - 29) வழிமொழிந்தன.

‘நாவலாம் மரத்தினாலே நாமமாய்த் (பெயராக) துலங்கி நின்று

நாவந்தீவு நந்தின் நன்மணி போன்ற தன்றே” என்று ‘உதயணகுமார காவியம் பெயர்க் காரணத்துடன் ‘நாவலந்தீவு என்றது. தொல்காப்பியர்,

“தண்பொழில் வரைப்பு” (தொல் பொருள் 78)

என்றதற்குப் பேராசிரியர் “நிலத்துக்கு நிழல் செய்யும் நாவல் அம் பொழில் உள்” என்றார்.

நாவல் மரம் “கடவுள் மரம்” என்றார் கம்பர் (மருத்துமலைப் படலம் - 48) பூம்புகார்க் காவல் தெய்வம் ‘சம்பா (சம்பு - நாவல்) பதி’ எனப்பட்டது.

இவ்வாறு நாவல் மரம் நாட்டுக்கமைய இதன் தொடர்பில் நாட்டு மக்கள் அவரிலும் உழவர் பெருமக்கள்