பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் [...] 99

எவ்வாறாயினும் நாவல் மரம் நாட்டிற்காகி அழைப்பதற்காகி, அறைகூவலுக்காகிக் கொம்பு நடும் குறியாயிற்று.

நாவல் நடும் முறையைப் புத்தமும், சமணமுமே கொண்டமையால் அவற்றின் சமயப் பங்காயிற்று.

செய்யாறு வட்டத்தில் நாவல் என்னும் பெயர் கொண்ட ஊர் ஒன்று உள்ளது. இங்கு இக்காலத்தும் சமண சமய மடம் இருத்தல் குறிக்கத்தக்கது.

ஏற்றல்

குண்டலகேசி அறைகூவலாக நட்ட நாவல்கொம்பை நீலகேசி அறைகூவலை ஏற்கும் குறியாக,

“இலை நாவல் இறுத்திட்டாள் (ஒடித்தாள் ‘சங்கப் பாங்கில் நட்ட கொடியை அல்லது பிடித்த கொடியை அசைப்பதாக இருந்தது. அது பாங்கு ஒடிப்பது பாங் கன்று. செற்றம் காட்டும் சமயப் பங்கு.

சமய வாதக்களம்

சமய வாதம் மணிமேகலை காலத்தில் விழாமேடை யிலும் பொதுவிடத்திலும் நிகழ்ந்தது . ஞானசம்பந்தர் காலத்தில் அரசவையிலும், வெளியிலும், ஆற்றங்கரை யிலும், மடத்திலும், தொடர்ந்து பிற சோலை, கோயில் களிலும் நிகழ்ந்தன. -