பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

வரலாற்றின் வரலாறு

கவிஞர்கோ கோவை இளஞ்சேரன்

வணங்கி மகிழ்கின்றேன்.

“தொடக்க உரையைக் குறிப்பெடுத்துள்ளேன். பட்டி மன்றம் பற்றிய அரிய ஆய்வுரை இது. இக் குறிப்புக் கருத்துக்களில் 90 விழுக்காடு எனக்குத் தெரியாதவை என்கிறேன். இவ்வுரையை இவர் கட்டுரையாகவோ நூலாகவோ எழுதித் தர வேண்டுமென்று வேண்டுகின்றேன்”

- இக்கருத்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் உரைக்கப்பெற்றது. தஞ்சை மாவட்டத்திலுள்ள செம்பியன் மாதேவி என்னும் ஊரில் நிகழ்ந்த ஒரு பட்டிமண்டட நடுவர் உரையின் முன்னுரை இது. நடுவர் உரையாற்றியவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ந. சஞ்சீவி அவர்கள். தொடக்க உரையாற்றியவர் அன்று உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் இன்று இந் நூலாசிரியர்.

முன்னைத் துணை இயக்குநர், பதிப்புத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

xi