பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் பாங்கும் சமயப் பங்கும் T 105

“தமிழ்த் தருக்க நூலையே வடவர் வைசேடிகம் என்றனர்”

என்றும் காட்டினர் . வாதத்தில் இந்தத் தருக்கம் சமய வாதத்தாரால் கையாளப்பட்டது.

“தருக்கச் சமணர்” என்று ஞானசம்பந்தர் குறித்ததும், “தருக்கினால் சமண் (சமணவாதம்) செய்து” என்று பெரியாழ்வார் பாடியதும் இச்சொல்லின் செருக்குப் பொருள் கொண்டேயாகும். -

இத்தருக்க வாதம் சமணத்திற்கும் புத்தத்திற்குமே உரிமையாயிற்று.

இதுவரை கண்ட சமயப் பங்குகள் கொண்டு தமிழ்மண்ணில் இயல்பாய்ப் பாங்குடன் நிகழ்ந்த பட்டி மண்டபத்தைச் சமயப் பங்கு செற்றத்திற்கும் (பகைக்கும்) கலவரத்திற்கும் சற்றுச்சற்றே மாற்றியது.

சங்கப் பாங்கையும் சமயப் பாங்கையும் ஆய்ந்த

இப்பகுதி பட்டி மண்டப வரலாற்றில் இரண்டு அதிகாரப்

பகுதிகள்.

பாங்கும் பங்கும் இவ்வாறு அமையினும் பட்டி மண்டபம் நிகண்டுகளிலும் இலக்கியங்களிலும் பெருமை யுடன் பேசப்பட்டது. அவற்றைக் காண்பது இப் பகுதியை நிறைவு செய்வதாகும்.