பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 | பட்டி மண்டப வரலாறு

பட்டினப் பாலையிலும், மதுரைக் காஞ்சியிலும் குறிப்பாக அமைந்ததை உரையாசிரியர்வெளிப்படுத்தினார்.

இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில்

“பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபம்”

என்றார்.

சாத்தனார், “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்”

என்று பாங்குடன் பாடினார். -

“பாடல் பயில்களம் பட்டி மண்டபம்” என் இ)

பிங்கலர் விளக்கத்துடன் அமைத்தார்.

“பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோ டிரண்டும் அறியே னையே” என்றுமாணிக்கவாசகர் பாடல் உயர்வாகக் காட்டுகிறது.

- o * - . 98 பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்’

பாடல் வேதிகை பட்டிமண்டபம்”

எனக் கம்பரும் பதிந்தார்.

மாணிக்கவாசகர் பாடலைப் பாடுங்கால் பழச் சாறும் தேனும் கலந்து ஊனிலும், உயிரிலும் கலந்து உவட்டாமல் இனிப்ப” தாகக் கண்டவர் வள்ளலார் இராமலிங்க அடிகள் பட்டிமண்டபச் சொல்லாட்சியிலும் அவரை அடியொற்றி,