பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 T பட்டி மண்டப வரலாறு

- .

நாய் வாயால் ஒலித்தலைக் குரைத்தல் என்கிறோம். அக்குரைத்தலிலும் பலவகையான மாற்றுஒலிகளால் தனது பலவகை உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. முனகிக் குரைத்தால் காதல் உணர்வு, உரக்கக் குரைத்தல் பகை உணர்வு உறுமிக் குரைத்தால் சின உணர்வு, கனைத்துக் குரைத்தால் விட்டுக்கொடுக்கும் உணர்வு, ஊளையிட்டுக் குரைத்தால் அச்சஉணர்வு அல்லது நோய் உணர்வு. மேலும் நாம் அறிய இயலாமல் ஒன்றுக்கொன்று தன் தன் உணர்வுகளைக் காட்டிக் குரைக்கும் ஒலிகள் பல.

நாய் போன்று உயிரினங்கள் உணர்வுகளை வெளிப் படுத்த வாயால் ஒலிக்கின்றன ஆனாலும் அவை யாவும் வாயில்லா உயிரினங்களே வாயிருந்தும், வாயால் ஒலி எழுப்பியும் அவை இப்பெயர் பெற என்ன தீவினை செய்தன? ஒரு தீவினையும் செய்யவில்லை ஆனால்

நல்வினை ஒன்றைச் செய்வதில்லை.

அவை வெளியிடும் ஒலிக்குத் தொண்டைதான் செயற்படுகின்றது. வாய் அதற்கு உதவுகின்றது. தொண்டை யிலிருந்து எழும் ஒலியை வாயின் நா பற்கள், உதடுகள், அண்ணம் ஆகிய a. றுப்புக்களும் மூக்கும் முயன்று தொழிற் பட்டால் அவ்வொலி வெவ்வேறு எழுத்தொலிகளாக வரும். அந்த எழுத்துக் கூட்டல்களே சொல் மொழி - பேச்சு-உரை

எனப்படும்.