பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 16 T பட்டி மண்டப வரலாறு

“நிலத்திற் கிடந்தமை கால் (முளை) காட்டும், காட்டும் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்’ என்றார்.

வாய்ச்சொல்

இதில் ‘குலத்திற் பிறந்தார் சொல்’ என்று சொல்லை மட்டும் வைத்திருக்க வேண்டியவர் வாய் சேர்த்து வாய்ச்சொல்’ என்றார். இங்கு வாயிலிருந்து வரும் சொல் என்பதுபொருள் அன்று. சொல் வாயிலிருந்துதானே வரும் பின் ஏன் வாய் சேர்த்தார்? இதற்குப் பரிமேலழகர் விடை தந்தார்.

“வாய் என வேண்டாது கூறினார், தீயன

பயிலா என்பதறிவித்தற்கு” என்றார்.

வாய் சேர்ந்ததால் சொல் நல்லதாயிற்று. சொல் சேராமலே வாய் மட்டும் நின்று சொல்லையும் அதன் கருத்தையும் புலப்படுத்தும்.

“வணங்கிய வாயினர் ஆதல் அரி து’ என்பதில் வாயினர் என்பதற்கு வாயை உடையவர் என்பது பொருளன்று சொல்லை உடையவர்’ என்று பொருள்;

சொல்லுக்காக வாய் மட்டுமே அமைந்தது.

வாய்விடல்

வாய்விடல் என்றொரு தொடர் அமைந்தது. இதற்கு வாய்சொல்லை; விடல்-சொல்லல் என் றுபொருள். கபிலர்,