பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 T பட்டி மண்டப வரலாறு

இலக்கியங்கள் கொண்டும் வழக்குகள் கொண்டும் அறிய முடிகின்றது.

இவ்வரலாற்றைக் குறிப்பாகக் காண இடந்தரும் இலக்கிய அடிகளையும், தொடர்களையும் காணும்போது அவற்றின் காலத்தைக் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. இவ்வாறு கொள்வதால் கால ஓட்டத்தில் சொல் கொண்ட பொருள் மாற்றத்தையும், மாறுபாட்டையும், முரண் பாட்டையும்கூட அறிய முடியும் மாந்தரின் உணர்ச்சிப் பாங்கும், உணர்ச்சி வடிகாலும், வழுக்கலும் சொற்களின் பெருமையை நிலைநாட்டியும், நிலைகுலைத்தும் வைத்

துள்ளன.

இக்குறிப்புடன் வாய் - சொல் வரலாறு, இங்கு இவ்வாறு தொடர்கின்றது.

வாய் வாளாமை

வாயால் சொல்லை வழங்க வேண்டாத இடத்தில் வழங்காது வாளா சும்மா. இருத்தல் நலம். முடிவாய் வாய்வாளேன் நிற்ப”

என்னும் கலித்தொகைத் தொடர் வேண்டாத இடத்தில் பேசாது இருத்தலைக்குறித்தது.

பேச முடியாத நிலையில் உள்ளம் திகைக்கும் போது,