பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | 12?

“சித்தம் திகைத்து வாய்வாளா நின்றான்'3

என்று பேசாது நின்றதைப் பரிபாடல் குறித்தது . அதே பாடலில், நீ பேசவேண்டா என்னும் பொருளில்

முழவின் வருவாய்! நீ வாய்வாளா”

முழவன வருவாய, -

என்று அமைந்துள்ளது.

இளங்கோவடிகள் வாயைச்சும்மா வைத்திருக்க மாட்டாமல்’ என்னும் பொருளில்,

“வாய் வாளாமையின் வண்டமிழ் இகழ்ந்த” என்றார்.

தண்டமிழாசான் சாத்தனார் மற்றோர் வகையில் வாய்வாளாமைக்கு விளக்கந் தந்தார் வாதத்தின்போது வந்த வினாவிற்கு விடை சொல்வதைத் துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல், வாய்வாளாமை என நான்கு கூறி, அவற்றுள் வாய்வாளாமையை

விளக்கினார் :

வாய்வாளாமை ஆகாயப்பூ

பழைதோ? புதிதோ? என்று புகல்வான்

உரைக்கு மாற்றம் வாளாதிருத்தல்” 16 என்றார். இவ்விளக்கம் பட்டிமன்ற நெறிக்கும் பொருந்தும். வாய்வாளாது இருக்கவேண்டிய இடத்தில் மீறிப்பேசினால் அது வாய் காவாமை ஆகும்.