பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$22 பட்டி மண்டப வரலாறு

வாப் காவாமை, வாய்ப்பகை

“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

x & 7 . . . . சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு’

என்றது. பொருத்தமான அறிவுரை இவ்வறிவுரையைப் பொதிந்து,

“காவா தொருவன் வாய் திறந்து சொல்லுஞ்சொல் ஒவாதே தன்னைச் சுடுதலால்” (நாலடி - 63)

என்று விளக்கம் எழுந்தது. இவ்வெண்பா வாய் காவாமை’ என்னும் சொல்லமைப்புக்குக் குறிப்பு தருவதாகவும் உள்ளது.

“வாய்காவாது பரந்துபட்ட

வியன்பாசறைக் காப்பாள” (புறம் - 22 - 15)

என்றது வாய்காவா என்றும் சொல்லமைப்பைக் குறித்தது. வாய்காவாத பேச்சால் பகைதான் மூளும்.

“மழவர் வாய்ப்பகை கூடியும் மண்ணொடு கடுந்திறல்’

(அகம் - 101 - 6)

என்று வாய்ப்பகை கூடிய வேண்டாததைச் சுட்டி அச் சொல்லை அறிமுகப்படுத்தியது.