பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 23

வாய்ப்பறை

வாய்ப்பகை வளர்ந்தால் வாய்ப்பேச்சு உரக்க வெளிவரும் அது முழங்கவும் செய்யும் தம்பட்டமடிக்கும் ஒலியாய்ப் படபடக்கும். அப்பேறுவாயே தம்பட்டமாகும். அஃதாவது பறை ஆகும் . அப்பேச்சு வாய்ப்பறை, இந்தப்பறை என்னும் தம்பட்டத்தை அடிக்கும் கோல்

நாக்கு வாய்தான் பறை. இதனை,

“நாக்கடிப்பு (கோல்) ஆக வாய்ப்பறை அறையினும்”

(சிலம்பு -14-29)

“நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்தீர்”

( - 25 -51)

“வாய்ப்பறை பறைந்து துாற்றி”

(சீவ சிந்த 211)

-என வாய்ப்பறை’ என்னும் சொல் உருவாயிற்று.

வாய்த்தொட்டி

இவ்வாறு பறையறையக் காரணமான வெறுப்பு, இன்னாச் சொல்லுக்கும், இழிசொல்லுக்கும் காரணமாகும். இழிசொல்லைத் தருவது

“துணை இதழ் வாய்த்தொட்டி”

(பரிபாடல் -20 - 51)