பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | i29

மணிமேகலை துறவுத்தன்மை வழுவாது வாதிட் டாள். கடுஞ்சொல், பட்டிச்சொல் சொல்லாமல் வாதிட் டாள் சமயக் கருத்துப்போரைப் பெருமிதமாக

நடத்தினாள்.

ஆனால், வடபுலக் கற்பனை மகளிரான குண்டல கேசியும், நீலகேசியும் கடுஞ்செயலையும் பகடிச்சொல்லை

யும் கொண்டு வாதிட்டதாகக் காண்கின்றோம்.

“மாறுகொடு பழையனூர் நீலி செய்த

வஞ்சனையால்” என்றபடி

பழையனூர் நீலி என்பாள் தன்னை வஞ்சித்துக் கைவிட்ட கணவனைப் பழிவாங்கும் வஞ்சத்துடன் அடக்க மாகவே புரட்சி செய்தாள் அதனால் தன் கணவனையே பழிவாங்கியது மட்டுமன்றி வேளாளச்சான்றோர் எழு பதின்மர் தமக்குத்தாமே தற்கொலையைச் செய்து கொள்ள வைத்தாள். அவள் உள்ளொன்று வைத்துப் புறத்தே வேளாளப் பெருமக்களை நம்பவைக்கக் கண்ணிர் விட் டாள். வஞ்சமாக அவள் கண்ணிர் விட்டதால் வஞ்சமான

கண்ணிர் நீலிக்கண்ணிர்’ என்று பெயர் பெற்றது.

அபிராமி அம்மனைப் பாடிய அபிராமி பட்டர் அவ் வம்மை வஞ்சம் செய்யாது அருள்வதைச் சொல்பவர்,

‘அபிராமி அம்மைஎம்மைக் கைவிடமாட்டாள் என்பவர்