பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#30 படட்டி மண்டப வரலாறு

‘நீலி செய்யாள்” என்றார் . இதில் பழையனூர் நீலியின் செயல் நினைவுறுத்தப்படுகிறது.

படிப்படியாக இவ்வாறு பெண்கள் வாய்ச்சொல் வளர்ந்ததை வைத்துப் பொதுவாகப் பெண்களின் பேச்சு தீமையே தரும் என்று பழியை விரித்தனர்.

ஒரு தனிப்பாடல் இது

“பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும் பெண்ணிருவர் பேசில் விழும் விண்மீன்கள் பெண்மூவர் பேசில் அலை சுவறும் பேதையே பெண்பலர் பேசில்உலகென்னாமோபின்’ இப்பாடல்

பெண்பேச்சால் நிலநடுக்கம் வரும், வானத்து விண்மீன்கள் விழும், கடல் அலை வற்றும், உலகமே என்ன ஆகுமோ என்று கற்பனைக்கும் எட்டாத கடுமைகள் நேரும் என்கின்றது.

மாயூரம் வேதநாயகனார் “நல்ல பெண்ணைப் பார் நீ

து தா” என்ற இசைப்பாட்டால் நல்ல மணமகளைத்

தேடுபவர்,

“அதிகப் பேச்சுக்காரி பெரும் வம்பி ஆயிரம் ஆனாலும் அவள் வேண்டாம் தம்பிள்

என்றுவாள்நீட்டிப் பேசுபவளை ‘வம்புக்காரி என்றார்.