பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால விளைச்சலுக்குக் கால்கோள் நாட்டி மூச்சேற்றி விட்ட அருஞ்சான்றோர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். தெளிந்த நினைவோட்டமும் தேர்ந்த பொழிவாற்றலும், ஆர்ந்த கருத்து ற்றமும் நிறைந்தவர்கள் தவத்திருஅடிகளார். என்பால் நாற்பது ஆண்டுகளாகத் தலைநாள்போன்று அருளன்பைப் பெய்கின்றவர்கள் இதனால் மட்டுமன்றி நூலின் கருத்துாற்றம் கருதியும் அணிந்துரை அருளி புள்ளார்கள். -


அணிந்துரை நூலோட்ட உயிரோட்டத்தின் இழை யோட்டமாகத் திகழ்கின்றது. பெருந்தகவின் வைரமுடியாக விளங்கும் தவத்திரு அடிகளாரைப் போற்றி வணங்கி நன்றி படைக்கின்றேன்.


அணிந்துரை நூலிற் புகுவோரைக் கொண்டு செலுத்தும்.


நூலின் ஆசிரிய முன்னுரை நூற்கருத்துக்களின் முன்னோடியாக வேண்டும் . அதனைக் கருதி ஆய்வின் மாணிக்கச் சுருக்கமான கால மும்முனைக் கண்ணாடியாக மூன்றைக்குறிக்கலாம்:


“கல்வி பயில் களம் பட்டி மண்டபம்” - இது முற்காலப் பாங்கு நிலை. *


“பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்


xiv.