பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | 131

இவ்வாறாக வாய்ப்பட்டி’ என்னும் வசைச்சொல்

பெண்கள் மேல் ஏற்றப்பட்டது, காலப்போக்கில்.

பட்டி என்னும் சொல்லில் உள்ள இ விகுதி தலைவி, கிழவி, பெண்டாட்டி என்றெல்லாம் பெண்பால் விகுதியாக வரினும் அஃதே ஆண்பாலுக்கும் அமைந்தது. “களி, பிடி, மானி, காமி, கள்வன்” (நன் பொதுப்பாயிரம்-39) என்றும், அறிவிலி, போக்கிலி, துச்சாரி எனும் சொற்கள் ஆண்பாலைக்குறித்தன.