பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ) பட்டிகள்

பட்டி ஆண்கள்

ஆனால், தொன்மைக் காலத்தில் பெண்கள் இவ்வாறு தாழ்வாகக் குறிக்கப் பெறவில்லை . பரத்தையர் தாழ்வு படுத்தப்பட்டனர் பொதுவில் பெண்கள் பெருந்தக்க பெருமை உடையவர்களாகவே பேசப்பட்டனர் . மேலும் சற்று விரிவாகக் கண்டால் பெண்களுக்குப் பிற்காலத்தில் பட்டிப் பட்டம் கிடைத்தமை போன்று முற்காலத்திலும் இடைக்காலத்திலும் பெரும்பகுதி ஆண்களுக்கே பட்டிப் பட்டம் அதிகமாகக் கிடைத்தது அப்பட்டிப் பட்டமும், வாயாடிப் பேச்சுக்காக அன்று வாய்காவாது பேசும் பேச்சைப்போல, காவலின்றிச் செய்யும் சிறு குறும்பு களுக்கும் பட்டிப் பட்டம் தரப்பட்டது.

இலக்கியப்பட்டிகள் சிறுபட்டி

சங்ககாலம் முதலாகச் சில பட்டிகளைக் காண் போம்.

ஒரு காதல் குமரி - தோழி உரையாடல காட்சி :

குமரி கேட்டாயோ கதையை!

தோழி சொன்னால்தானே கதை கேட்பேன்.