பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு 133

தோழி

குமரி

தோழி

அன்னையொடு வீட்டிற்குள் இருந்தேன். இருந்தேனா? அவன் பருக நீர் கேட்டு வாயிலில் நின்றான். அன்னை என்னை நீர் கொடு’ என்றாள். கொண்டுபோய்க் கொடுத்தேன். நீர்க்குவளையை வாங்குவது போன்று என் கையைப் பிடித்துக் கொண்டானடி என்னை அறியாமல் ‘அம்மாவோ என்று அலறினேன். அன்னை என்ன(?) என்று ஓடி வந்தாள். என்ன சொல்வேன்?

‘கையைப் பிடித்தான் என்றுசொல்வாய்...

போடி நீர் விக்கிற்று’ என்றேன்.

ஏன் அப்படிச் சொன்னாய்?

அஃது இருக்கட்டும் அன்னை பதறிப்போய் அவன் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவன் என்னைக் கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்”

திருட்டுப்பிள்ளைதான் போலும் ஆம், அவன்

எவன்?

அவன்தான் அந்தப் பட்டி

ஏனடி பட்டி என்கிறாய்?