பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு T 137

“வெண்ணெய் திரிந்து மேய்ந்து, ஆய்ச்சியர் ஆடைகளை ஒளித்து, நப்பின்னையை ஆட விட்டுக் காதற் குறும்புகள் செய்து கோயில்

மாடாய்க் காவலின்றித் திரிந்த கண்ணனை ஆண்டாள்,

“பட்டி மேய்ந்ததோர் கார்ஏறு (கருங்காளை)

- :.- ‘‘.-----  : - - பலதேவர்க்குக் கீழ்க்கன்றாய்” (தம்பியாய்)

என்று பட்டி மாட்டுக் கன்றாய்ப் பாடினாள்.

மகளைப் போன்றே ஆண்டாளின் தந்தையாகிய பெரியாழ்வாரும் கண்ணனைக் காவலில்லாத குறும்புக்

காரனாக

“புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டுவந்து அட்டி அழுக்கி, அகம்புக்கு அறியாமே கட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும் உண்ட பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி!

4. - ... i 7 பத்மநாபா கொட்டாய் சப்பாணி 2

என்று பட்டிமாட்டுக் கன்றாகவே பாடினார்.

அண்மைக் காலத்தவரான கந்தப்பதேசிகர் என்பார் தாம் எழுதிய தணிகை உலாவில் தினைக்காவலில் நின்ற வள்ளிக் குறத்தி வாய்காவாது, வேடனாக வந்த முருக னிடம் பட்டி அடித்தாள் அவளையும் அவள் தொடர்பில் முருகனையும்"