பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 T பட்டி மண்டப வரலாறு

“இளந்துணை மகார் தம்மிற்கூடி விளையாடல் குறித்துப் பொழுதைக்குப் படைத்திட்டுக் கொண்ட பெயர் அவை, பட்டி புத்திரர், கங்கை மாத்திரர் என்றதனாலும் விளங்கும்”

என்று விளக்கினார் . அஃதாவது துணைசேர்ந்து விளை யாடும் சிறுவர் விளையாட்டு நேரத்திற்குத் தமக்குப் பெயர் சூட்டிக்கொள்வர். அவை புனைபெயர்கள்போல் படைத் துக் கொள்பவை . அதற்குச் சான்றாக, பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்பவை காட்டப்பட்டன.

சேனாவரையரும் இப்பெயர்களைக் காட்டியுள்ளார்.

இவ்வகையில் பட்டிபுத்திரர் என்பார் குறிக்கப்பட்டனர்.

இப் பட்டி புத்திரர் என்னும் பெயருக்கும் நம் பட்டிமண்டப நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ‘பட்டி என்னும் சொல்லமைப்பு கொண்டே இங்குக் காணவேண்டியுள்ளது.

கூட்டுச்சேரும் சிறார் தம் கூட்டிற்கு ஒரு குறியீட்டுப் பெயர் வைத்துக்கொண்டு நான் வேண்டுமா? இவன் வேண்டுமா கூட்டிற்கு என்று விளையாட்டில் கேட்டுக் கொள்வர். அவ்வகையில் திறமையுள்ள பெயர்களாக வீரன் வேண்டுமா? தீரன் வேண்டுமா? என்று பெயர் குறித்துக்கொள்வர். இவ்வாறு திறமைச் சிறப்பைக் குறிக்க பட்டி புத்திரர் என்றும் கங்கை மாத்திரர் என்றும்