பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ) பட்டி - சொல் வரலாறு

பட்டி என்னும் சொல் எவ்வாறு இப்பொருள்களைக் கொண்டது; இப்பொருள்கள் கொள்ளும் நிலையில் இச்சொல் எந்த மூலத்தில் அமைந்தது?

இதற்குச் சொல்லின் பகுதியும், அதன அடித்தளமான மூலமும், அதன் அடியான வேர்ச்சொல்லும் காரணங் களாகும் சொல்லின் வேர் ஆய்வு இதற்குத் துணை செய்யும். .

படு - வினைப்பொருள் 2

பட்டி என்னும் சொல்லின் முதனிலை படு இவ் வினை ஆக்குவதையும் குறிக்கும், அழிப்பதையும் குறிக்கும்.

‘படு’ என்பது துணைவினையாகவும் நின்று எனப் படும், எனப்படுவர், தலைப்படுவர், பழிப்படுவ செய்யார்

என்றெல்லாம் அவ்வவ்விடத்திற்கேற்ற பொருளைத் தரும்.

இவ்வாறன்றி படு’ என்பது தானே வினையாக நின்று, ஆக்கல், அழித்தல் எனும் இரு முரண்பட்ட பொருள் களைத் தருவது இச்சொல்லிற்கமைந்த தனித்தன்மை

இருவகைக்கும் தனித்தனியே சான்றுகள் ஆக்கப் பொருளில் சில :