பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | 153

எனவே, பண்’ என்னும் மூலத்தில் வளர்ந்த படுவும் பண்ணையும் பொருளில் ஒன்றுகின்றன.

விளையாட்டு

பட்டிகுறித்தல்’ என்பது ஒரு விளையாட்டு. இதற்குக் கட்டுக்கடந்து போதல் என்று பொருள் இப்பொருளும் வாய்காவாது பேசும் பட்டிக்கும் துணையாகும்.

இனி விளையாடல் என்பதன் பொருள் பொதிவைக் கண்டால் அஃதும் படு’, ‘பண்ணை இரண்டையும் ஒத்து நிற்க வைப்பதை அறியலாம்.

‘விளையாடல் என்றால் என்ன?

இத்தொடர் விளை - (ஆள்தல்) ஆடல் என்று பிரி பட்டு ஒரு வினைவை உண்டாக்கவோ பெறவோ செயலைக் கையாளுதல் என்று பொருள் விரியும் செயலைப் பண்ணு தல் ஆகும் இவ்வகையில் பண்ணும் பண்ணையும், படு’ என்பதும் ஒன்றாகின்றன.

இங்குவிளையாடல் என்பதற்கு இக்காலத்துச் சிறுவர் விளையாட்டை நினைவிற் கொள்ளக்கூடாது. விளை யாடல் என்பதன் தோற்றத்துப் பொருளுடன் பார்த்தால் பண்ணையும் விளையாட்டு, பட்டியும் விளையாட்டு. சொல்லளவில் பொருந்தப் பார்க்கும் போது பட்டிக்கு விளையாட்டு என்பது நிறைவாகப் பொருந்துவதாகத் தெரியவில்லை.