பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - பட்டி மண்டப வரலாறு

--- -

பட்டிகர்

பட்டி மாட்டிற்கு ஆனது போன்று காவலை மீறியும் கடந்தும் களவு செய்யும் திருடர்களைப் பிங்கல நிகண்டு பட்டிகர்'என்றே குறிக்கின்றது.

அவ்வாறென்றால் பட்டிமண்டபத்தில் ஈடுபட்டோர் மாடு போன்ற பட்டிகளா() என்று வினவிடத் தோன்றும். அத்துடன் குறும்புப் பேச்சு பேசியவர்களா என்றும் வினவலாம். இவையிரண்டும் அல்ல.

இதற்கு முன்னர் சங்கப்பாங்கிற்கும் சமயப் பங்கிற்கும் அமைந்த வேறுபாடும், சமயப்பங்கு பெருந்தன்ைமை யிலிருந்து நழுவியதையும் குறித்துள்ளமை கொண்டு அமைதியுறலாம். சங்கப் பாங்கில் பெருமை, பெருந்தன்மை, கருத்து நோக்கம், பண்பாடு இருந்தன. சமயப்பங்கில் இவையனைத்தும் குறைந்தன; மறைந்தன.

இதுகொண்டு பண்டைச் சான்றோர் பங்குகொண்ட பட்டி மண்டபப் பட்டி தகவானது . அது வாய்காவாது எழுந்ததன்று பட்டி’ என்னும் சொல் ஆய்வில் படு’ முதனிலையாக நின்று ஆக்கல், சிதைத்தல் என்னும் இரு பொருளையும் தந்ததை நினைவுகூர்ந்தால் பண்டையப் பட்டிமண்டபம் ஆக்கல் உள்ளிடு கொண்டது . வரவர மாறிய பின்காலப்பட்டி’ சிதைத்தல் உள்ளிடு கொண்டதாயிற்று.