பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ) சொல் - சொற்போர்

சொல்

வாயில் தொடங்கி வாய்ச்சொல் வழியாக வாய்ப் பட்டி வரை பட்டி விளக்கிப் பார்க்கப்பட்டது . வாய் வளர்ச்சி அவ்வாறமைய வாயுடன் சேர்ந்த சொல் வாய்ச் சொல்) இப்பட்டி நிகழ்ச்சிக்கு எவ்வாறு விரிந்தது?),

எவ்வாறு பயன்பட்டது () என்பனவும் அறியத்தக்கன.

பொதுவில் சொல் என்பதற்குச் சொல்லப்படுவது என்பது பொருள் இதனை விரித்தால் எழுத்துக் கூட்டல் காாக ஒலிக்கப்படுவது, அத்துடன் பொருள் தருவது என்றாகும் இது உல உல உலவு என்று வளர்ந்து நா முதலிய வாய் உறுப்புக்கள் உலவுவதால் அசைவு முதலிய இயக்கத்தால் ஒலியாக உருவாவது உலவு, சொலவு ஆகிச் சொல் ஆயிற்று “எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்றபடி பொருள் குறித்து வருவதே சொல் என்றும், அப்பொருளும் காரணப் பொருளாகும் என்றும் தொல்காப்பியம் விளக்கிற்று. -

எழுத்துக் கூட்டல்களாகப் பொருளுடன் எழும் ஒலிக்குச் சொல்’ என்பது போன்று பல சொற்கள் உருவாயின. தமிழில் இவ்வகையில் 102 சொற்கள் உள்ளன. அத்துணையும் பொருள்தரும் எழுத்துக் கூட்டல்களைக்