பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பட்டி மண்டப வரலாறு

“உரைகோளாளர்க்கு உரைப்பது நூலே52 என்ற திலும் இப்பொருள் உள்ளது . உரையைக் கேட்பவன் ‘உரைகோளாளன். உரைப்பவன் உரையாளன் - உரை

யாசிரியன்.

இவ்வாறு பொருள் விரித்து உரைப்பதை தாலும், எழுதினாலும் அது உரைநடை எனப்பட்டது.

ஆனால் இப்பொருட்கருத்தில் உரைத்தல் என்னும் சொல் வழக்கில் வழங்கப்படுவதில்லை . சொல்லுதல் என்னும் பொதுப்பொருளிலேயே இலக்கியங்களும் இச் சொல்லை மிகுதியாக ஆள்கின்றன. ‘விரித்து உரையாதார். என்று வழங்கிய திருக்குறளே சொல் என்னும் பொதுப் பொருளில் பல இடங்களில் சொல்கின்றது . வேறு பல பொருள்களிலும் இலக்கியங்கள் ஆண்டுள்ளன.

“உரை முடிவு காணான் இளமையோன் ,53

என்று கரிகாலன் சொல்லப் பெற்றதில் ] என்றது வழக்கைக்குறிக்கின்றது. -

“ஒற்றும் உரைசான்ற நூலும்"54 என்ற உரைசான்ற என்றதற்குப் புகழ் பொருந்திய என்று புகழ்’ என்னும் பொருளே கண்டனர். இவ்வாறெல்லாம் உரை என்பதற்கு அதன் உள்ளிட்டுப் பொருள் அன்றி வெவ்வேJll பொருள்கள் கிளைத்தன.