பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு f75

தொன்மைக் காலத்தில் நிகழ்ந்த சொற் பெருக்கு களைக் குறிக்கும் சொல்லாகக் கட்டுரை என்னும் சொல்லையே இலக்கியங்களில் காண்கின்றோம்.

கட்டுரை என்பதன்பொருள்பொருள்பொதிந்ததாக உரைக்கப்படுவது என்பது . இவ்வாறே உரையாசிரியர் பலரும் எழுதினர். • .

இக்காலத்தில் கட்டுரை உரைக்கப்படுவதைக் குறிப் பதாக இல்லை . எழுதப்படுவதைக் குறிக்கின்றது . ஒரு கருத்தை விளக்கிக் கட்டுக்கோப்போடு எழுதப்படுவதைக் கட்டுரை என்கின்றோம். இப்பொருள் உண்டானதற்கு மூலகாரணம் சிலப்பதிகாரத்தில் உள்ள உரைபெறு கட்டுரை” என்பது இத் தொடருக்குக் கொண்ட மாற்றுக் கருத்தால்தான் கட்டுரை எழுதப்படுவதைக் குறிக்கலா யிற்று உரைபெறு கட்டுரை என்பது பாடல் அன்றி உரைநடை பெற்றுப் பொருள் பொதிந்ததாக உரைக்கப் படுவது என்னும் பொருள் கொண்டது. சிலப்பதிகாரத்தில் உள்ள அப்பகுதி எழுத்துருப் பெற்றுள்ளது என்னும் ஒரே வகைக் கருத்தால் எழுந்தது, காலப்போக்கில் எழுதப் படுவதைக் குறிக்கும் சொல்லாய்க் கட்டுரை பயன்படுவ தாயிற்று.

இச்சொல் மேடைப்பேச்சு அல்லாமல் உரையாற்று வதைக் குறிப்பது (உரையாடலை அன்று என்பதை இச்சொல் அமைந்த இடங்களைக் கொண்டு அறிய