பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 T பட்டி மண்டப வரலாறு

முடிகின்றது . இருவர் தத்தம் கருத்துக்களைப் பேசிக் கொள்வது உரையாடல் மற்ற ஒருவரோ பலரோ அவர் பேசாமல் ஒருவர் மட்டும் பேசுவது உரையாற்றல். இந்த உரையாற்றல் சிலப்பதிகாரத்தில் கட்டுரை என்னும் சொல்லில் அதிகமான இடங்களில் பயின்று வருகின்றது. எனவே, சிலப்பதிகாரத்திலிருந்து ஒன்றிரண்டு காணலாம்.

பள்ளியறையில் கோவலன் குலவி மெய்மறந்து கண்ணகியின் அழகைப் பாராட்டிப் பேசினான். கண்ணகி பேசவில்லை; ஒரு சொல்லும் சொல்லவில்லை . எனவே, இது உரையாடல் அன்று கோவலன் பேச்சு’ அடிகளில் நீண்டுள்ளது . இவன் பேச்சில் உவமை, கதைக்குறிப்பு, கருத்து விளக்கம் உள்ளன . ஓரளவில் சிறு உரையாற்றல்

எனலாம். இப்பேச்சு துவக்கப்படுவதைக்

கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை”

என்றும், முடிவில்,

“உலவாக் கட்டுரை”, ‘குறியாக்கட்டுரை.” “உலவாக் கட்டுரை” என்றும் கட்டுரை என்றே இளங்கோவடிகள் குறித்தார் . இது நிறைவான சொற்பொழிவு என்பதற் கீல்லை. ஏனென்றால் அவை இல்லை.

சிலம்பில் 23 ஆம் காதை கட்டுரை காதை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது . இக்காதையில் மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் உரையாற்றும் நீண்ட பேச்சு