பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல, பெயர் ஆய்வு T 179

l–

வன் ஒருவனுக்கே ஆயினும் பொதுவான இவ்வுரை அனைவர்க்கும் பொருந்தும் இவ்வகையிலும் நிறைவான சொற்பொழிவாகும்.

இவைபோன்றே மணிமேகலையைத் தொடர்ந்து இன்றைய மனோன்மணியம் வளர இவ்வகையாகச் சொற் பொழிவு அமைப்புகள் உள்ளன. எனவே, முற்காலத்திலும் சொற்பொழிவு நிகழ்ந்தது. அது விரிவுரை, நல்லுரை என்னும் பெயரிலும் நிகழ்ந்துள்ளது.

சொற்பொழிவு ஆற்றுப்படை

சொற்பொழிவின் நெறிகளை வகுக்கும் தனியொரு முழுநூலாக முற்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை . இருந்து மறைந்திருக்கலாம்.

இக்காலத்தில் சில நூல்கள் எழுந்துள்ளன. இவற்றுள் முதல் தோற்றமாக “சொற்பொழிவு ஆற்றுப்படை” என்னும் நூல் எழுந்துள்ளது.

இஃது ஒரு சிறு நூல் கையடக்க அளவானது. 56 பக்கங்களைக் கொண்டது . திருநெல்வேலி திரு பால் வண்ண முதலியார் இதனை எழுதினார் சொற்பொழிவு செய்ய விரும்புவோரை ஆற்றுப்படுத்தும் (வழிப்படுத்தும்) நூல். உரைநடை நூல் 11 இயல்களைக் கொண்டது.

நான்காம் சங்கமாகிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழாவில் இந்நூல் அரங்கேற்றம்