பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பட்டி மண்டப வரலாறு

பெற்றது . சேதுபதி மன்னர் திருமிகு பாண்டித்துரைத் தேவர் தலைமையில் அரங்கேறியது. -

தனித்தமிழில் எழுதப்பட்டமை குறிக்கத்தக்கது.

டாக்டர் கலைஞர்கருணாநிதி அவர்கள் பேச்சுக்கலை பற்றி அரிய நூலை எழுதியுள்ளார் தேர்ந்து தெளிந்த சொற்பொழிவு மன்னராகிய கலைஞர் நூல். சொற்பொழி வுக்கு உயிரோட்டத்தைக் கூட்டுவது. பொழிவாற்ற விரும்பு வோர்க்கு மட்டுமன்றிப் எப்பொழிவாளருக்கும் வழி காட்டும் நூல் எனலாம்.

மேலும் சிறு சிறு நூல்கள் இரண்டு வெளிவந் துள்ளன.

பொதுவான சொற்பொழிவால் வன்மையும் வளர்ச்சியும் சொற்போருக்கு அடித்தளம் அமைத்தன. சொற்போர்

சொற்பொழிவின் அடுத்த வளர்ச்சியாகச் சொற்போர் தோன்றியது சொற்பொழிவில் நேர்ந்த இடையீடே சொற் போர் சொற்பொழிவில் கருத்துக்களைச் சொல்லும்போது அக்கருத்துக்களில் மாறுபட்டோர் இடையிட்டு மறுத்துக் கூறுவர் ஐயங்களை வினவுவர் . மறுத்துக்கூறும்போது கருத்தை வைத்தவர் மாற்றம் கூற வேண்டும். அம்மாற்றமும் ஒத்தது அன்று என்றால் மீண்டும் மறுப்பார் . இவ்வாறு நேரும் தடை விடைகளால் பேச்சு மறுப்பு, எதிர்ப்புப் பேச்சாகும். இவ்வாறு சொல்லாடலும் ஒரு போரே.