பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டி - சொல், பெயர் ஆய்வு | 185

வரலாற்றில் வந்த ஆறு விக்கிரமாதித்த மன்னர் வரலாற்றில் பட்டி என்றொரு பெயரே இல்லை . எனவே பட்டி முழுமையாகக் கற்பனைக் கதை உறுப்பினன்.

சுவையாலும், கவர்ச்சியாலும் பலமொழிகளில் (ஆங்கிலத்திலும் கூட) மொழிபெயர்க்கப்பட்டது மக்க ளிடையே பரவி நிலைத்தது. கற்றோரும் மற்றோரும் அறிந்த ஒன்றாயிற்று . இதனால் திறமைமிக்கவர் என்னும் பட்டி புத்திரர் தொடர் எழுந்தது.

இக்கதை எழுந்த அடுத்த நூற்றாண்டாகிய 13ஆம் நூற்றாண்டு, உரையாசிரியர் சேனாவரையர் காலம். இவருக்குப் பிற்பட்டவர் உரையாசிரியர் நச்சினார்க் கினியர், -

ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுக்காலம் தமிழ் நாட்டிலும் பரவி நிலைத்துவிட்ட இக்கதைப்படி பட்டி பட்டிபுத்திரர் வந்ததாகக் கருதினர்.

இங்குச் சொல்லாய்வில் கண்டபடியும், சங்க கால இலக்கியங்கள் தொடக்கமாகப் பிற்கால இலக்கியங்களி லும் பட்டி என்னும் தமிழ்ச்சொல் உள்ளது.

- எனவே, விக்கிரமாதித்தன் வட்டிக்கும் தமிழ்ச் சொல் பட்டிக்கும் முடிச்சுப் போட்டது எள்ளி நகையாடற்

குரியதே.