பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பட்டி மண்டப வரலாறு

மற்றொரு மொழியாய்வு வகையில் இதனை நோட்டமிடலாம்.

தமிழ்ச் சொற்கள் பல இந்திய வளாக மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இடம் பெற்றுள்ளன . இவ் . வகையில் பட்டி என்னும் தமிழ்ச்சொல் வடமொழியில் இடம் பெற்றிருக்கலாம்

இவ்வாறு கருத ஒரு சான்று உள்ளது.

தமிழ்நாட்டு வடக்கெல்லைக்கு அண்மையில் உள்ள கிருட்டிணா ஆற்றங்கரையில் பட்டி புரோளு என்றொரு சிற்றுார் உள்ளது. அங்குச் செய்த அகழாய்வில் அஃது ஒரு புத்தக்களம் எனக் காணப்பட்டது. அங்குக் கிடைத்த பேழைகளிலும் தூண்களிலும் காணப்படும் எழுத்து பிராமியிலும் வேறுபட்டதாய்த் தனிப்பெயராக பட்டி புரோளு எழுத்து என்றே வழங்கப்படுகிறது . ஆயினும் அவ்வெழுத்துகள் திராவிட எழுத்து வடிவத்தை ஓரளவில் ஒத்துள்ளன என்பர்.

எனவே, தமிழுடன் நெருங்கிவரும் எழுத்துக்கள் அவை தமிழ்நாட்டைப் போன்று அவ்வாற்றங்கரையில் ஒரு சிற்றுார் பட்டி என்று பெயர் பெற்றிருந்திருக்கலாம். கிருட்டிணா ஆற்றங்கரையில் புகுந்த தமிழ்ப்பட்டிச் சொல் வடபுலத்திலும் புகுந்து விக்கிரமாதித்தன் கதையில் இடம் பெற்றிருக்கலாம்.