பக்கம்:பட்டி மண்டப வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊ) பட்டி மண்டபம் (பெயர்)

பட்டி அரங்கம்

பட்டி மன்றம்

பட்டி மண்டபம் இவை மூன் கம் சொற்போர் நிகழ்ச்சியைக் குறிக்க வழங்கப்படும் பெயர்கள் . மூன்றில் எது பொருந்தும்: மூன்றும் வெவ்வேறு பொருளைக் கொண்டன. ஆயினும், ஒன்றிற்கொன்று தொடர்புடையது.

அரங்கம்

‘அரங்கு என்பது உயரமான களம் , அஃதாவது பெருமளவில் மேடை சிலப்பதிகார அங்கேற்று காதையில் நாட்டிய அரங்குக்கு நீளம், அகலம், உயரம் கூறப்பட் டுள்ளது. இதுகொண்டும் மேடை என அறியலாம். பிங்கல நிகண்டு (662) நாட்டியமாடும் களத்தையும் சூதாடும் களத்தையும் அரங்கம் என்கின்றது . சூடாமணி நிகண்டு, (இடப்பெயர் : 53) போர்ப் பயிற்சிக் களத்தையும் சேர்த்துக் கூறுகின்றது. சேந்தன் திவாகரம் என்னும் பழைய நிகண்டு, இவற்றுடன் புலவர் கூடும் அவைக்களத்தையும் சேர்த்து,

போரின் இடமும் வட்டாடு இடமும்

ஆடல் இடமும் அவையும் அரங்கம் ,71 என்கின்றது